டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மாடல்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல் பைக் இந்தியாவில் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய மாடல் சார்ந்து வெளியாகியுள்ள முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் புதிய மாடல்: வெளியீட்டு தேதி மற்றும் தகவல்கள்
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் புதிய மாடல் பைக் அறிமுகம் செய்ய டிரையம்ப் மோட்டார்சைக்கில்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும், இம்மாத இறுதிக்குள் புதிய மாடல் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

டிரையம்ப் புதிய பைக் ஆகஸ்டு 24-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்றும் இது டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. டிரையம்ப் ஸ்கிராம்ப்ளர் ஸ்ட்ரீட் இந்திய விலை ரூ.8.0 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

டிரையம்ப் மாடலுக்கு அழகு சேர்க்கும் வடிவமைப்பு, மற்றும் ஸ்கிராம்ப்ளர் ஸ்டைல் எக்சாஸ்ட், மாற்றக்கூடிய பிலியன் சீட், அலுமினியம் ரியர் ரேக், கழற்றக்கூடிய பிலின் ஃபூட்பெக்ஸ் ஹேங்கர் உள்ளிட்டவற்றுடன் அட்வென்ச்சர் ஸ்டைல் முன்பக்க பெக்ஸ் மற்றும் இன்ஜின் பேஷ் பிளேட் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது. 

அதிக சவுகரியத்தை வழங்கும் எர்கோனோமிக்ஸ், வழக்கத்திற்கு மாறாக சீட் சற்றே கீழே பொருத்தப்பட்டுள்ளது. 12 லிட்டர் கொள்திறன் கொண்ட ஃபியூயல் டேன்க் கொண்ட டிரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் லிட்டருக்கு 26 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

புதிய ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் 900சிசி பேரலெல்-ட்வின் இன்ஜின், ரைடு பை வையர், வழக்கமான ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 54 bhp-யை 6,000 rpm மற்றும் 80 Nm டார்கியூ 2,850 rpm செயல்திறன் கொண்டுள்ளது. 

டேபுளர் ஸ்டீல் கிராடிள்  சேசிஸ் மாற்றப்பட்டுள்ளது, மேலும் இரு சக்கரங்களிலும் வையர்-ஸ்போக் வீல்ஸ் மற்றும் முன்பக்கம் 19 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங் அம்சங்களை பொருத்த வரை 310 மில்லிமீட்டர் முன்பக்க டிஸ்க், நிசின் 2 பிஸ்டன் ஃப்ளோட்டிங் கேலிப்பர், சிங்கிள் 255 மில்லிமீட்டர் பின்புற டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது. 

மாற்றக்கூடிய ஏ.பி.எஸ். மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் கொண்டுள்ள ஸ்ட்ரீட் ஸ்கிராம்ப்ளர் டுகாட்டி ஸ்கிராம்ப்ளர் டெசர்ட் ஸ்லெட் மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com