முத்தரப்பு டி20 தொடர் - ஸ்காட்லாந்து அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து

நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தியது. #SCOvIRE #IREvSCO
முத்தரப்பு டி20 தொடர் - ஸ்காட்லாந்து அணியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அயர்லாந்து
Published on

டெவெண்டெர்:

நெதர்லாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் நெதர்லாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் நெதர்லாந்து அணி அயர்லாந்தை வீழ்த்தியது. இத்தொடரின் மூன்றாவது போட்டியில் ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் நேற்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து அயர்லாந்து அணியின் பால் ஸ்டிர்லிங், ஜேம்ஸ் ஷனான் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஷனான் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின் ஸ்டிர்லிங் உடன் ஆண்ட்ரூ பால்பிர்னி ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி ரன் குவித்தனர். 

அரைசதம் அடித்த ஸ்டிர்லிங் 29 பந்தில் 51 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த சிமி சிங் டக்-அவுட் ஆனார். அதன்பின் பால்பிர்னி உடன் கேரி வில்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். பால்பிர்னி 40 பந்தில் 74 ரன்கள் (11 பவுண்டரி, ஒரு சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். கேரி வில்சன் 38 பந்தில் 58 ரன்களில் வெளியேறினார். 

அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. ஸ்காட்லாந்து அணி பந்துவீச்சில் அலஸ்டையர் எவான்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 206 ரன்களை இலக்காக கொண்டு ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்தது.

ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜார்ஜ் முன்சே, கைல் கொயிட்சர் ஆகியோர் களமிறங்கினர். கொயிட்சர் 33 ரன்களிலும், முன்சே 41 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரிச்சி பெர்ரிங்டன் 29 ரன்கள் எடுத்தார். அயர்லாந்து அணியினரின் பந்துவீச்சில் ரன்குவிக்க முடியாமல் ஸ்காட்லாந்து அணியினர் திணறினர்.

தொடர்ந்து களமிறங்கிய கேலம் மேக்லியாட் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். டைலன் பட்ஜ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 23 ரன்களுடன் களத்தில் இருந்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் அயர்லாந்து அணி 46 ரன்கள் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. அயர்லாந்து அணி பந்துவீச்சில் ஜார்ஜ் டாக்ரெல் 2 விக்கெட் வீழ்த்தினார். 

இதைத்தொடர்ந்து வருகிற 16-ம் தேதி நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில், ஸ்காட்லாந்து - அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. #SCOvIRE #IREvSCO

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com