முத்தலாக் மசோதாவுக்கு மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு: ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தல்

முத்தலாக் மசோதாவை மக்களவையில் ஆதரித்த நிலையில், மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
நவநீத கிருஷ்ணன்
நவநீத கிருஷ்ணன்
Published on

முத்தலாக் மசோதா கடந்த சில நாட்களுக்கு முன் பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன்மீது விவாதம் நடைபெற்று, பின்னர் நிறைவேற்றப்பட்டது. அப்போது அதிமுக எம்பி-யான ரவீந்தரநாத் குமார் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் பேசினார். அப்போது ‘‘முத்தலாக் சட்ட விரோதம் என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துள்ளது. மசோதா குறித்து முழுமையாக ஆராய்வதற்கு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என்றார்.

மக்களவையில் ஆதரவு தெரிவித்த நிலையில் மாநிலங்களவையில் அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com