திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது

திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபர் கைது
Published on: 

திருச்சி:

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சோபனாபுரத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் பேபி (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது).

பேபி அங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந்தேதி அவரை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கடத்தி சென்று பாலியல் கொடுமை செய்ததாக அவரது தந்தை சரவணன் உப்பிலியபுரம் போலீசில் புகார் செய்தார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். இவர் ஓட்டல் தொழில் செய்து வருகிறார். மீட்கப்பட்ட மாணவி பேபிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதே போன்று மற்றொரு சம்பவத்தில் துறையூர் திட்டக்குடியை சேர்ந்த ராஜா என்பவர் மகள் முஜிபா (வயது 17, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் கடந்த 17-ந்தேதி சூப்பர் மார்கெட் வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பவில்லை.

இது குறித்து ராஜா துறையூர் போலீசில் புகார் செய்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் மீது இதுகுறித்து புகார் கூறப்பட்டுள்ளது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X