

ஹோபார்ட்:
ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முத்தரப்பு டி20 தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு தொடரின் இரண்டாவது டி20 போட்டி ஹோபார்ட் நகரில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர் (கேப்டன்), டார்கி ஷார்ட், கிறிஸ் லின், கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி (விக்கெட்கீப்பர்), ஆஷ்டன் அகர், ஆண்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக்
இங்கிலாந்து: ஜேசன் ராய், அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் மலன், இயான் மார்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லெர் (விக்கெட்கீப்பர்), சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, அடில் ரஷித், கிறிஸ் ஜோர்டன், டாம் குர்ரன், மார்க் உட்
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெசன் ராயும், அலெக்ஸ் ஹேல்ஸ்சும் களமிறங்கினர். ராய் 9 ரன்களில் கேன் ரிச்சர்ட்சன் பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து டேவிட் மலன் களமிறங்கினார். இங்கிலாந்து அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்கள் எடுத்துள்ளது. ஹேல்ஸ் 22 ரன்களுடனும், டேவிட் மலன் 28 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். #AUSvsENG #T20TriSeries