பெண்கள் முத்தரப்பு டி20- இங்கிலாந்து இமாலய இலக்கை எட்டி இந்தியாவை வீழ்த்தியது

பெண்கள் முத்தரப்பு டி20 தொடரில் இந்தியா நிர்ணயித்த 199 ரன்களை எளிதாக எடுத்து இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. #INDWvENGW
சதம் அடித்த இங்கிலாந்து வீராங்கனை வியாட்
சதம் அடித்த இங்கிலாந்து வீராங்கனை வியாட்
Published on

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. மிதலி ராஜ், எஸ் மந்தனா ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 129 ரன்கள் குவித்தது.

மந்தனா 40 பந்தில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மிதலி ராஜ் 43 பந்தில் 7 பவுண்டரியுடன் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த ஹர்மன்ப்ரீத் கவுர் 22 பந்தில் 30 ரன்னும், வாஸ்டிராகர் 10 பந்தில் 22 ரன்களும் எடுக்க இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் குவித்தது.

பின்னர் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. அந்த அணியின் டேனியல் வியாட், பிரையோனி ஸ்மித் ஆகியோர் தொடக்க வீராங்கனைகளாக களம் இறங்கினார்கள். ஸ்மித் 15 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து டேனி பியூமோன்ட் களம் இங்கினார். இவரை ஒருபக்கம் வைத்துக் கொண்டு வியாட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பந்துகளை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விரட்டினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. பியூமோன்ட் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.


76 ரன்கள் குவித்த எஸ் மந்தனா

வியாட் 64 பந்தில் 15 பவுண்டரி, 5 சிக்சருடன் 124 ரன்கள் குவித்து 17-வது ஓவரின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் அவுட்டாகும்போது இங்கிலாந்து அணி 17 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்திருந்தது. கடைசி 18 பந்தில் 19 ரன்கள் தேவைப்பட்டது.

இங்கிலாந்து அணி 10 பந்தில் 10 ரன்ளக் அடிக்க, 18.4 ஓவரில் 199 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்து தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருந்து. இந்த வெற்றி மூலம் 2-வது வெற்றியை ருசித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com