பல்லவன் இல்லத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்.
பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போக்குவரத்து தொழிலாளர்கள்.
Published on

சென்னை:

போக்குவரத்து கழக தொழிலாளர்ளுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் காத்திருப்பு போராட்டங்களை தொழிற் சங்கங்கள் நேற்று நடத்தின.

அதனையொட்டி 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தை வருகிற 20-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. தொழிற்சங்கங்களை அழைத்து பேசாமல் தன்னிச்சையாக தேதியை அறிவித்ததற்கு தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள். இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

எந்த தொழிற்சங்கங்களுடன் பேச்சவார்த்தை நடைபெறும். இதனை யார் நடத்துகிறார்கள் என்ற விளக்கமும் இல்லாமல் அறிவித்துள்ளதை தொழிற்சங்க பிரதிநிதிகள் எதிர்த்தனர்.

இதுகுறித்து தொ.மு.ச. நடராசன், சி.ஐ.டி.யூ. ஆறு முகநயினார் ஆகியோர் கூறியதாவது:-

13-வது ஊதிய ஒப்பந்த காலம் 2019 செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்தது. புதிய ஒப்பந்தம் போடாமல் 6 மாதம் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

எந்தெந்த தொழிற் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடைபெறும். பேச்சு வார்த்தையை யார் நடத்துகிறார்கள்? அமைச்சரா, செயலாளரா, நிர்வாக இயக்குனர்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். பேச்சுவார்த்தை என்று கூறி பல மாதங்களாக இழுத்தடிக்கும் நிலை உள்ளது. புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவாக போட்டு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் பஸ் போக்குவரத்து லேசாக பாதிக்கப்பட்டன. ஒரு சில பகுதிகளுக்கு குறைந்த அளவில்தான் பஸ்கள் இயக்கப்பட்டன.

X

Maalai Malar
www.maalaimalar.com