கேபிள் டிவி புதிய கட்டண முறை அமல்படுத்தும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு - டிராய்

வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் அறிவித்துள்ளது. #TRAI #CableTV
கேபிள் டிவி புதிய கட்டண முறை அமல்படுத்தும் கால அவகாசம் மார்ச் 31 வரை நீட்டிப்பு  - டிராய்
Published on

புதுடெல்லி:

கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், கேபிள் டிவியின் புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என டிராய் இன்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை ஏற்று கேபிள் டிவி புதிய கட்டண முறைகளை அமல்படுத்துவதற்கான கால அவகாசம் மார்ச் 31ம் தேதி அவரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #TRAI #CableTV

X

Maalai Malar
www.maalaimalar.com