நாகை அருகே டிராக்டர் மோதி பெண் பலி

நாகை அருகே மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நாகை அருகே டிராக்டர் மோதி பெண் பலி
Published on

நாகப்பட்டினம்:

நாகை அருகே உள்ள காரனூர் மேலத் தெருவை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). நேற்று மோட்டார் சைக்கிளில் தனபாலும், தனலட்சுமியும் சென்றனர். அப்போது ஒரு டிராக்டர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தனலட்சுமியை மீட்டு மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து பாலையூர் இன்ஸ்பெக்டர் வீரபாண்டியன் வழக்குபதிவு செய்து டிராக்டர் டிரைவர் வெங்கடேசன் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com