சுற்றுலா துறை மந்திரி அல்போன்ஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்

மத்திய சுற்றுலா துறை மந்திரியான கே.ஜே.அல்போன்ஸ் கண்ணன்தானம் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலா துறை மந்திரி அல்போன்ஸ் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வானார்
Published on

புதுடெல்லி:

ராஜஸ்தான் மாநிலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து வந்தவர் வெங்கையா நாயுடு. இவர் சமீபத்தில் துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த உறுப்பினர் பதவி காலியாக இருந்து வந்தது.

இதற்கிடையே, ராஜஸ்தானின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக சுற்றுலா துறை மந்திரியாக பதவி வகித்து வரும் அல்போன்ஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், காங்கிரஸ் தரப்பில் அவரை எதிர்த்து யாரையும் நிறுத்தவில்லை.

எனவே, ராஜஸ்தானில் மாநிலங்களவை உறுப்பினராக அல்போன்ஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விரைவில் அவர் உறுப்பினராக பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்வார் என்று கூறப்படுகிறது.

அல்போன்ஸ் எம்.பி.யாவதற்கு ராஜஸ்தான் எம்.எல்.ஏ. கன்ஷியாம் திவாரி எதிர்ப்பு தெரிவித்தார். அவரை கட்சியினர் சமாதானம் செய்து வைத்ததை தொடர்ந்து அல்போன்ஸ் எம்.பி.யாக தேர்வானது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com