கன்னியாகுமரியில் திமுக - பாஜக இடையே நிலவும் போட்டி: வெல்லப்போவது யார்?

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் திமுகவிற்கே அதிக ஆதரவு உள்ளது.
கன்னியாகுமரியில் திமுக - பாஜக இடையே நிலவும் போட்டி: வெல்லப்போவது யார்?
Published on

தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், திமுக மற்றும் அதிமுக மூத்த தரப்பு மக்களின் ஆதரவைக் கொண்டிருந்தாலும், நாம் தமிழர் கட்சி மற்றும் புதிதாகத் தொடங்கப்பட்ட விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் போன்றவை இளைஞர்கள் மற்றும் ஒரு குறிப்பிட்ட தரப்பு மக்களின் ஆதரவை ஈர்த்து வருகின்றன.

இதனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நான்குமுனை போட்டி நிலவுகிறது. இருப்பினும் இதில் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு மாலைமலர் தரப்பில் மக்களிடையே கருத்துகள் கேட்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்திம் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மார்த்தாண்டம் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கேட்பில், அப்பகுதியில் திமுகவிற்கே அதிக ஆதரவு இருப்பது தெரியவந்துள்ளது.

இரண்டாவது இடத்தில் பாஜக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com