மோடி தலைவராக இருக்கும்வரை இந்தியாவை யாராவது தாக்கினால் அமெரிக்கா நிச்சயம் உதவும் - ட்ரம்ப்

இரு நாடுகளுக்கும் இடையே இறுதி கட்டத்தை எட்டியுள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
If anyone attacks India while Modi is the leader, the US will certainly help – Trump.
Published on

இந்தியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா நிச்சயம் வந்து உதவும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உறுதியளித்துள்ளார்.

பிரான்ஸில் நடைபெற்ற 52-வது ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியுடன் நடத்திய இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப் இதனை தெரிவித்தார்.

பிரதமர் மோடி இந்தியாவின் தலைவராக இருக்கும் வரை இந்த ஆதரவு நிச்சயம் தொடரும். ஒருவேளை புதிய தலைவர் வந்தால் அதுபற்றி தமக்குத் தெரியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“யாராவது அவரை தாக்கினால் (இந்தியாவை), நாங்கள் அங்கே இருப்போம். புது தலைவர் இருந்தால் அதுபற்றி உறுதியாக கூறமுடியாது.” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி ஒரு "கடுமையான வர்த்தகர்" எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே இறுதி கட்டத்தை எட்டியுள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com