ஐதராபாத் நில ஏலத்தில் புதிய வரலாறு: ரூ.1,447 கோடிக்கு விற்பனையான பிளாட்!

இந்த மின் ஏலம் எம்.எஸ்.டி.சி தளம் வழியாகவும், ஜே.எல்.எல் நிறுவனத்தின் ஆலோசனையுடனும் வெளிப்படையாக நடத்தப்பட்டது.
Hyderabad land auction
Published on

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் முக்கிய வணிக மையமான ராய்துர்க் பகுதியில் நடத்தப்பட்ட மின்னணு நில ஏலத்தில் 5.38 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி2, ரூ.1,447.22 கோடிக்கு விற்பனையாகி மிகப்பெரிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. தெலுங்கானா தொழில்முறை உள்கட்டமைப்பு கழகம் நடத்திய இந்த ஏலத்தில், ஒரு ஏக்கர் நிலத்தின் விலை ரூ.269 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஒரே வாரத்தில் உடைந்த முந்தைய சாதனை

ராய்துர்க் நாலேஜ் சிட்டி பகுதியில் கடந்த வாரம் நடத்தப்பட்ட மற்றொரு ஏலத்தில் 5.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிளாட் பி1, ஏக்கருக்கு ரூ.264 கோடி வீதம் ரூ.1,386 கோடிக்கு விற்பனையானது. அந்த சாதனை படைக்கப்பட்டு ஒரே வாரத்திற்குள் தற்போது ஏக்கருக்கு ரூ.5 கோடி அதிகரித்து, புதிய வரலாற்று சாதனையை இந்த பிளாட் பி2 ஏலம் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் ஏக்கருக்கு ரூ.237 கோடியாகவும், ஜூன் மாதம் ரூ.204 கோடியாகவும் இருந்த நிலத்தின் மதிப்பு, தற்போது மிக குறுகிய காலத்தில் ரூ.269 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த இரு வாரங்களில் நடத்தப்பட்ட இந்த இரு ஏலங்கள் மூலம் 10.63 ஏக்கர் நிலத்திலிருந்து தெலுங்கானா அரசுக்கு மொத்தம் ரூ.2,833.22 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இந்த மின் ஏலம் எம்.எஸ்.டி.சி தளம் வழியாகவும், ஜே.எல்.எல் நிறுவனத்தின் ஆலோசனையுடனும் வெளிப்படையாக நடத்தப்பட்டது. ஐதராபாத்தின் நவீன உள்கட்டமைப்பு வசதிகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழிலாளர் சாதகமான சூழல் ஆகியவை சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை பெருமளவில் ஈர்த்து வருவதை இந்த ஏலத்தின் வெற்றி வெளிப்படுத்துகிறது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com