கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்... நடிகை இவர்தான்!

ஜி.வி.பிரகாஷ், மாளவிகா மனோஜ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிரிக்கெட் வீரராக ஜி.வி. பிரகாஷ்... நடிகை இவர்தான்!
Published on

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் நடிகை மாளவிகா மனோஜ் இணைந்து நடிக்கும் புதியத் திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது.

ஜோ படத்தின் இயக்குநர் ஹரிஹரன் ராம்தான் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷே இசையமைக்கிறார்.

மேலும் படத்தை ஜி.வி. பிரகாஷ்குமாரே இணைந்து தயாரிக்கிறார். தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இன்று அறிவிப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இத்திரைப்படம் ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக உள்ளது.

இப்படத்தின்மூலம் ஜி.வி.பிரகாஷ் முதன்முதலாக ஒரு கிரிக்கெட் வீரராக திரையில் தோன்றவிருப்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com