கனமழை எதிரொலி - நாளை நடைபெறவிருந்த சென்னை மற்றும் அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

கனமழையின் எதிரொலியாக சென்னை பல்கலை மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் மழையால் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம்
Published on

சென்னை :

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளது. கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய துவங்கியுள்ளது. டிசம்பர் -1 மற்றும் 2ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், கனமழையின் எதிரொலியாக நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலை. மற்றும் அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பதிவாளர்கள் அறிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com