புதுவை சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல்

புதுவை சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
புதுவை சட்டசபை
புதுவை சட்டசபை
Published on

புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று கவர்னர் உரையுடன் தொடங்கியது.

கவர்னர் உரையை தொடர்ந்து இன்று 2-ம் நாளாக சட்டமன்றம் கூடியது. இதில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசினர். புதுவை சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான நாராயணசாமி நாளை காலை 9.30 மணிக்கு சட்டசபையில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதத்தில் மாநில திட்டக்குழு கூடி பட்ஜெட் தொகையாக ரூ.8 ஆயிரத்து 425 கோடி நிர்ணயித்தது. இதற்கான கோப்புகளுக்கு அனுமதி பெற காலதாமதம் ஆனதால் இம்மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com