

தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்து வருவதால் நாடு முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
டில்லியில் இன்று ஒரு கிலோ தக்காளி 60 முதல் 70 ரூபாய் வரை விற்கப்பட்டது. டெல்லி மாநிலத்திற்கு ஹரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து தக்காளி வரும். ஹரியானா மற்றும் இதர தக்காளி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக 70 சதவீத பயிர்கள் சேதமடைந்தன. இதனால் டெல்லிக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது.
இந்தியாவில் உள்ள மற்ற பெருநகரங்களிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் தக்காளி விலை 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனிடையே, தக்காளி விலை என்பது பருவகால மாற்றத்திற்கு தகுந்தாற்போல் மாறக்கூடியது. அதனால் தக்காளி விலையை தொடந்து கண்காணித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.