விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல், திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் வீடியோ தொகுப்பு

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல், திண்டுக்கல் சிறுமி பாலியல் வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு உள்ளிட்ட முக்கிய செய்திகளைப் பார்ப்போம்.
மதுரை ஐகோர்ட்
மதுரை ஐகோர்ட்
Published on

இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 11 பாராளுமன்ற மேலவை இடங்களுக்கான தேர்தல் வரும் நவம்பர் 9-ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.

என்னுடைய இந்துத்வா உங்களால் சரிபார்க்க தேவையில்லை: கவர்னருக்கு உத்தவ் தாக்கரே பதில்
   
கவர்னர் தளர்வுகள் அறிவிப்பு குறித்து எழுதிய கடிதத்திற்கு, உத்தவ் தாக்கரே சற்று கடினமான வார்த்தைகளால் பதிலடி கொடுத்துள்ளார்.

கேரளா தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன்
   
தூதரகம் பெயரை பயன்படுத்தி தங்கம் கடத்திய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ்-க்கு எர்ணாகுளம் கோர்ட் ஜாமீன் வழங்கியுள்ளது.

திமுக செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு
   
சென்னையில் தி.மு.க. செயற்குழு உறுப்பினர் தனசேகரனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
   
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு மேல்முறையீடு
   
திண்டுக்கல் அருகே சிறுமி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது.

தலைவர் வேடத்தில் கே.எஸ்.அழகிரி நடிக்கிறார்- குஷ்பு
   
நடிகை என கூறிய கே.எஸ்.அழகிரி தலைவர் வேடத்தில் நடிக்கிறார் என்று குஷ்பு கூறி உள்ளார்.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு மருத்துவமனையில் அனுமதி
   
தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு திடீர் மூச்சு திணறலால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

நான் உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை - நாட்டு மக்களிடம் கண்கலங்கிய வடகொரிய அதிபர்
   
வடகொரியாவில் நடைபெற்ற ராணுவ அணி வகுப்பு நிகழ்ச்சியின் போது, அதிபர் கிம் ஜாங் உன் உணர்ச்சிவசமாக பேசி மக்களைப் பார்த்து கண்கலங்கினார்.

வங்காளதேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்குவதற்கு வங்காள தேச அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

டி வில்லியர்ஸ் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர்: விராட் கோலி புகழாரம்
   
மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் திணறிய நிலையில், ருத்ர தாண்டவம் ஆடிய டி வில்லியர்ஸ் மனித சக்திக்கு அப்பாற்பட்டவர் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
   
சென்னை அபிராமபுரத்தில் உள்ள நடிகர் தனுஷ் வீட்டுக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல நடிகரின் படத்தில் இருந்து மோகன் ராஜா திடீர் விலகல்   

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் இருந்து இயக்குனர் மோகன் ராஜா விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com