டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி
டிஎன்பிஎஸ்சி
Published on: 

சென்னை:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 181 காலிப் பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் நடத்தப்பட்டன.

காலிப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வுகள் முடிந்த நிலையில், நேர்காணல் நடைபெற்றது. நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், இன்றே முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.  குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது . 

X

Maalai Malar
www.maalaimalar.com