தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வாபஸ்

பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #JactoGeo
தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பு வாபஸ்
Published on

சென்னை:

பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தலைமைச் செயலக ஊழியர்கள் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தலைமை செயலக பணியாளர்கள் சங்கத்தினர் அறிவிப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில், பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமை செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தலைமை செயலக பணியாளர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கூறுகையில், பிப்ரவரி ஒன்று முதல் தொடங்குவதாக இருந்த தலைமைச் செயலக ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்படுகிறது. மாணவர்களின் நலன், தமிழக அரசின் நிதிநிலை மற்றும் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. அனைவரும் நாளை பணிக்கு வரவேண்டும் என தெரிவித்துள்ளார். #JactoGeo

X

Maalai Malar
www.maalaimalar.com