8 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்- அமைச்சர் உதயகுமார்

சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். #Gaja #GajaCyclone #Udhayakumar
8 இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்- அமைச்சர் உதயகுமார்
Published on

சென்னையில் அமைச்சர் உதயகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

‘கஜா’ புயல் நெருங்கி வருவதை தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கஜா புயல் 3 முறை திசை மாறி உள்ளது. தற்போதும் அதன் நகர்வை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.

கடலூர் முதல் பாம்பன் வரை புயல் சேதம் அதிகம் ஏற்படும் என்பதால் சென்னை, கடலூர், ராமநாதபுரம், நாகை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் தயார் நிலையில் முன் ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் நாகையில் 3, சிதம்பரத்தில் 2, சென்னை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் தலா 1 வீதம் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கஜா புயல் தாக்குதலை சமாளிக்க கடலூருக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்.

ஆஸ்பத்திரிகளில் உள்ள ஜெனரேட்டர்களை மேல்தளத்தில் வைக்கும் படியும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் முழுமையாக நிரப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளோம்.

ஆக்சிஸன் சிலிண்டர், அத்தியாவசிய மருந்து பொருட்களை தேவையான அளவு இருப்பு வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்தால் அவற்றை சரி செய்ய தேவையான ஊழியர்களும் 1125 நீச்சல் வீரர்களும், 657 பாம்பு பிடிப்பவர்களும் தயார் நிலையில் உள்ளனர்.

புயலின் தாக்கத்தை பொறுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுவது பற்றி கலெக்டர்கள் முடிவெடுத்து அறிவிப்பார்கள். அரசு ஊழியர்கள் விடுமுறை இன்றி பேரிடர் சமயத்தில் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளோம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com