அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர், அமைச்சர்கள் இரங்கல்

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்
Published on

சென்னை:

தமிழக வேளாண்துறை அமைச்சராக இருந்து வந்தவர், துரைக்கண்ணு. இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து மூச்சு திணறல் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று நள்ளிரவு 11.15 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்” என்று தேரிவித்துள்ளார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “ அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு, அதிமுகவுக்கு பேரிழப்பு. அமைச்சர் துரைக்கண்ணு ஒரு எளிமையான மனிதர், பொதுமக்களிடம் அன்பாக பழகக்கூடியவர். அவரது மறைவுக்கு அரசு விதிமுறைப்படி இரங்கல் அனுசரிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ள இரங்கல் பதிவில், “பெரும் அன்புக்குரிய மாண்புமிகு தமிழக வேளாண்துறை அமைச்சர், திரு.துரைக்கண்ணு அவர்கள் காலமான செய்தி அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com