அண்ணா உருவப் படத்துக்கு முதலமைச்சர், துணை முதல்வர் மலர்தூவி மரியாதை

அண்ணாவின் 111-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் இபிஎஸ்
அண்ணா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் இபிஎஸ்
Published on

சென்னை:

பேரறிஞர் அண்ணாதுரையின் 111-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா உருவப் படத்துக்கு தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த விழாவில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அண்ணா பிறந்தநாள் விழாவுக்கு கட்சிக்கொடிகள், பேனர்கள் தவிர்க்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com