

தமிழக சட்டசபையில் இன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது:-
• பெண்களுக்கான இருசக்கர வாகன மானிய நிதி உதவித்திட்டத்துக்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு
• அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களின் மானியத்துக்கு ரூ.84.80 கோடி
• மகப்பேறு, பச்சிளம் குழந்தை பராமரிப்பு மையங்கள் ரூ.48 கோடியில் தரம் உயர்த்தப்படும்
• டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி ரூ.12,000-ல் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்வு
• தாமிரபரணி- நம்பியாறு இணைப்பு திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு
• தேசிய சுகாதார இயக்கத்திற்காக ரூ.1,551.22 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
• நடப்பாண்டில் ரூ.1,43,962 கோடி கடன் வாங்க முடிவு
• தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 9% ஆக உயரும்
• ஓசூரில் மலர்களுக்கான வணிக வளாகம் புதிதாக அமைக்கப்படும்
• பெண்கள், குழந்தைகள் நலனுக்கான சமூக நலத்துறைக்கு ரூ.5611.62 கோடி ஒதுக்கீடு