சட்டசபையில் அமைச்சருடன் தி.மு.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம்

தமிழக சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுடன் தி.மு.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #TNAssebly
சட்டசபையில் அமைச்சருடன் தி.மு.க. எம்.எல்.ஏ. வாக்குவாதம்
Published on

சென்னை:

சட்டசபை கூட்டத்தில் கேள்வி நேரத்தின்போது மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி கட்டிடம் பழுதடைந்து இருப்பதாகவும், எப்போது புதிய கட்டிடம் கட்டித்தர முடியும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா கேள்வி எழுப்பினார். அப்போது அரசு மீது சில குற்றச்சாட்டுகளை கூறினார். அந்த கல்லூரிக்கு ஒரு நூலகம் கூட கட்டிக் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

உடனே உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் எழுந்து அந்த கல்லூரிக்கு செய்து கொடுத்துள்ள பணிகளை பட்டியலிட்டார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டது என்று பட்டியல் போட முடியுமா? என்றார்.

அதற்கும் பதிலளிக்க டி.ஆர்.பி. ராஜா எழுந்தார். அவருக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து தி.மு.க.வினர் அனைவரும் எழுந்து நின்று குரல் எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com