

திருப்பூர்:
காங்கிரஸ் கட்சியின் வர்த்தக பிரிவு மாநிலபொதுச் செயலாளர் ராயல்.வி.தர்மதுரை பரிந்துரையின் படி மாநில தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏ திருப்பூர் மாநகர், வடக்கு மாவட்டத்திற்கு புதிய தலைவர்களை நியமனம் செய்துள்ளார்.
அதன்படி திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக ராஜாமுருகன், வடக்கு மாவட்ட தலைவராக பல்லடம் சத்தியமுர்த்தி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். புதிதாக நியமனம் செய்யபட்ட தலைவர்கள் ராயல்.வி.தர்மதுரை தலைமையில் மாநில தலைவர் வசந்தகுமார் எம்.எல்.ஏவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.