திருப்பத்தூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருப்பத்தூரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கபசுர குடிநீர் வைக்க கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.
கபசுர குடிநீர்
கபசுர குடிநீர்
Published on

திருப்பத்தூர்:

திருப்பத்தூரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கபசுர குடிநீர் வைக்க கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.

இதனையொட்டி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரே ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அரசு சித்தர் மருத்துவர் டாக்டர் விக்ரம்குமார் தலைமை வகித்தார் கலெக்டர் சிவன்அருள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.

திருப்பத்தூர் நகரில் பொதுமக்கள் கூடும் 10 முக்கிய இடங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முடிவில் கரிகாலன் நன்றி கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com