தூத்துக்குடி துப்பாக்கி சூடு- சீமான் நாளை ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சீமான் நாளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
சீமான்
சீமான்
Published on

தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.  அப்போது நடந்த போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிர் இழந்தனர். இது தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள இந்த விசாரணை ஆணைய அலுவலகத்தில் நாளை ஆஜராகி விளக்கம் அளிக்கம் அளிக்கும்படி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இதேபோல் தூத்துக்குடி தொகுதி எம்எல்ஏ கீதா ஜீவன், இந்த வாரத்தில் ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com