இன்று நினைவு நாள்: தியாகி இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் 3 அமைச்சர்கள் அஞ்சலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் 3 அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் மணிகண்டன், சரோஜா, ராஜலெட்சுமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
அமைச்சர்கள் மணிகண்டன், சரோஜா, ராஜலெட்சுமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
Published on

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினம் ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது. இன்று 60-வது நினைவு நாள் கடைபிடிக்கப்பட்டது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த வசதியாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. மேலும் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் காவல் துறை கூடுதல் இயக்குநர் திரிபாதி தலைமையில் போலீஸ் ஐ.ஜி., டி.ஐ.ஜி., போலீஸ் சூப்பிரண்டுகள், 40 துணை சூப்பிரண்டுகள் மற்றும் போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆளில்லா குட்டி விமானம் மூலமும் கண்காணிப்பு பணி நடைபெற்றது.

இதுதவிர பரமக்குடி நகரில் 56 சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் மணிகண்டன், ராஜலெட்சுமி, சரோஜா ஆகியோர் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அன்வர்ராஜா எம்.பி., மாவட்ட செயலாளர் முனியசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், மாவட்ட செயலாளர் திவாகரன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் இமானுவேல்சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தினர். முன்னதாக இமானுவேல்சேகரன் குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com