இது உண்மைக்கு கிடைத்த வெற்றி- இடைத்தேர்தல் முடிவு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருத்து

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி உண்மைக்கு கிடைத்த வெற்றி என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை:

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளனர். இருவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. இதனால் அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை முதலே தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் மத்தியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது, விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கூறினார்.

மேலும், இரண்டு தொகுதிகளிலும் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், தேர்தல் வெற்றிக்காக உழைத்த கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்தார். 

“இந்த இடைத்தேர்தல் வரலாற்று சிறப்பு மிக்க இடைத்தேர்தல். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக அளித்த பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் அவர்களுக்கு வாக்களித்தார்கள். இப்போது உண்மை தெரிந்த காரணத்தால் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மக்கள் அதிமுகவுக்கு அமோகமான வெற்றியை அளித்துள்ளார்கள். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி.

தர்மம், நீதி, உண்மை எப்போதும் வெல்லும் என்பதை இந்த இடைத்தேர்தல் காட்டுகிறது. திமுக பொய்யை நம்பியதால் இரண்டு தொகுதிகளையும் இழந்துள்ளது. 

இந்த வெற்றிக்காக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கடுமையாக உழைத்துள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார் எடப்பாடி பழனிசாமி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com