

ராய்ப்பூர்:
கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக ஆட்சியமைக்க தேவையான 112 தொகுதிகளை விட அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று அங்கு ஆட்சியமைக்க உள்ளது. இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த சத்தீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் கூறியதாவது:-
இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி, மேலும், பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்த கர்நாடகா மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அவர் தெரிவித்துள்ளார். #KarnatakaElections #KarnatakaVerdict #RamanSingh