சர்வதேச அளவில் புளூ வேல் கேமினை அதிகம் தேடிய இந்திய நகரம்

ஆன்லைனில் பலரது உயிரை பறித்த புளூ வேல் கேம், கூகுளில் அதிகம் தேடிய நகரங்களின் பட்டியலில் இந்திய நகரம் முதலிடம் பிடித்துள்ளது. இத்துடன் சர்வதேச அளவில் சென்னை உள்பட ஐந்து இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது.
சர்வதேச அளவில் புளூ வேல் கேமினை அதிகம் தேடிய இந்திய நகரம்
Published on

புதுடெல்லி: 

ஆன்லைனில் பலரது உயிர்களை பறித்த கொடூர கேமான புளூ வேல் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தியாவில் மிகவேகமாக பிரபலமான புளூ வேல் கேம், சர்வதேச அளவில் 30 நகரங்களின் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் புளூ வேல் முக்கிய பங்கு வகித்து இருப்பது தெரியவந்துள்ளது. 

அந்த வகையில் புளூ வேல் சார்ந்து கூகுளில் அதிக முறை தேடப்பட்ட நகரங்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் ஆன்லைன் தேடல்களில் ஐந்து இந்திய நகரங்கள் இடம்பிடித்துள்ளது. புளூ வேல் சார்ந்த தேடல்களின் கூகுள் டிரென்ட்ஸ் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருந்திருக்கிறது.  

தேடல்கள் அதிகமான நிலையில், கடந்த ஒரு மாதத்தில் இந்த கேம் விளையாடியோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களால் மேலும் பிரபலமானது. ஒரு மாதம், மூன்று மாதங்கள் மற்றும் ஒரு வருடம் என அனைத்து காலக்கட்டத்திலும் கொல்கத்தா வாசிகள் புளூ வேல் கேம் சார்ந்து அதிகம் தேடியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூகுளில் புளூ வேல் சார்ந்த தேடல்களில் கொல்கத்தா முதலிடம் பிடித்துள்ள நிலையில், சான் அன்டோனியோ, நைரோபி, கவுகாத்தி, சென்னை, பெங்களூரு, மும்பை, புதுடெல்லி, ஹவுரா, பாரிஸ் (பிரான்ஸ்) உள்ளிட்ட நகரங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கொல்கத்தா, கவுகாத்தி, சென்னை, மும்பை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட ஐந்து நகரங்களில் புளூ வேல் சார்ந்த தேடல்கள் அதிகமாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com