திருவாரூர் கமலாலய குளத்தில் ஆண்பிணம் - போலீசார் விசாரணை

திருவாரூர் கமலாலய குளத்தில் ஆண்பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் கமலாலய குளத்தில் ஆண்பிணம் - போலீசார் விசாரணை
Published on

திருவாரூர்:

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளத்தில் இன்று காலை ஒரு ஆண் பிணம் மிதந்து கொண்டிருந்தது. இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இது குறித்து திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குளத்தில் மிதந்து கொண்டிருந்த உடலை மீட்டனர். அப்போது இறந்து கிடந்தவர் விளமன் பகுதியில் டீக்கடை நடத்தி வந்த மணிகண்டன் (வயது 56) என்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்து மணிகண்டன் எப்படி இறந்தார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com