திருப்புவனம் அருகே இளம்பெண்கள் மாயம்

திருப்புவனம் அருகே இளம்பெண்கள் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்புவனம் அருகே இளம்பெண்கள் மாயம்
Published on

சிவகங்கை:

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள விரகனூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகள் ஆர்த்தி. சம்பவத்தன்று வீட்டில் இருந்து திடீரென மாயமானார்.

இதனால் பதட்டமடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுரேஷ்குமார் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் திருவானந்தம் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

திருப்புவனம்அருகே உள்ள பூவந்தி சரகத்துக்குட்பட்ட அதிகரை கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன். இவரது மகள் முத்து இருளாயி (வயது 25). இவர் அதேபகுதியில் உள்ள ஒரு மில்லில் வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முத்து இருளாயி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் காண வில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில் பூவந்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் உமாதேவி வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com