திருநாவலூர் அருகே பலத்த மழை: குளிர் தாங்க முடியாமல் பெண் மரணம்

திருநாவலூர் அருகே கடந்த 7 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இரவில் கடும் குளிர், காற்று வீசுகிறது. இந்த குளிர் தாங்க முடியாமல் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருநாவலூர் அருகே பலத்த மழை: குளிர் தாங்க முடியாமல் பெண் மரணம்
Published on

திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் இரவில் கடும் குளிர் காற்று வீசுகிறது.

இந்த நிலையில் திருநாவலூரை அடுத்த நாச்சியார்பேட்டைமேடு பகுதியை சேர்ந்த நாராயணசாமி என்பவரது மனைவி சகுந்தலா (வயது 63) என்பவர் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இன்று காலை வெகு நேரமாகியும் சகுந்தலா வீட்டின் கதவு திறக்கப் படாததால் அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது சகுந்தலா குளிர் தாங்காமல் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உளுந்தூர் பேட்டை தாசில்தார் பாலசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com