திருச்சிக்கு ரெயிலில் வந்த படகு தொழிலாளி மாயம்

திருச்சிக்கு ரெயிலில் வந்த படகு தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படகு தொழிலாளி மாயம்
படகு தொழிலாளி மாயம்
Published on

திருச்சி:

ராமநாதபுரம் திருவாடனை தெற்கு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 45) படகு ரிப்பேர் செய்யும் தொழிலாளி. இவர் 10 நாட்களுக்கு முன்பு வேலை விசயமாக சென்னைக்கு சென்றார். பின்னர் கடந்த 26-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட ரெயில் மூலம் சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது ரெயில் திருச்சிக்கு வந்த போது தான் துணி வாங்கி வருவதாக நண்பர்களிடம் கூறிவிட்டு திருச்சி ரெயில் நிலையத்தில் இறங்கி உள்ளார்.

பின்னர் சுரேஷ் தனது மனைவி முத்துலட்சுமிக்கு போன் செய்து தான் திருச்சியில் ஜவுளிதுணி வாங்கி விட்டு வருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு சுரேசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை.

அவரது செல்போன் சுவிட் ஆப் என்றுவருகிறது. அவர் எங்கு சென்றார்? என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்றும் தெரியவில்லை. இது குறித்து முத்துலட்சுமி கண்டொண்மென்ட் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான படகு தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com