அமெரிக்க ஓபன் - கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் டொமினிக் தீம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்றில் கெவின் ஆண்டர்சனை வீழ்த்திய டொமினிக் தீம் காலிறுதிக்குள் நுழைந்தார். #USOpen2018 #DominicThiem
அமெரிக்க ஓபன் - கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார் டொமினிக் தீம்
Published on

நியூயார்க்:

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் நான்காவது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த டொமினிக் தீம் மற்றும் தென் ஆப்ரிக்காவை சேர்ந்த கெவின் ஆண்டர்சனும் மோதினர்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே டொமினிக் தீம் அபாரமாக விளையாடினார். இதனால் 7- 5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார்.

தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டிலும் டொமினிக் தீம் சிறப்பாக விளையாடினார். இதனால் இரண்டாவது செட்டை 6 -2 என்ற கணக்கிலும், மூன்றாவது செட்டை 7-6(2) என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தினார்.

இறுதியில், டொமினிக் தீம் 7-5 6-2 7-6(2) என்ற கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

காலிறுதி போட்டியில் டொமினிக் தீம் உலகின் முதல் நிலை வீரரான ரபெல் நடால் அல்லது நிகோலஸ் பாசிலாஸ்விலியுடன் மோதவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #USOpen2018 #DominicThiem

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com