பிரதமர் மோடியால் உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்த மேன் vs வைல்ட்...

தொலைக்காட்சி நிகழ்ச்சியான மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன், பிரதமர் மோடி காட்டில் பயணித்தார். இந்த நிகழ்ச்சி உலக அளவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.
பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி
பியர் கிரில்சுடன் பிரதமர் மோடி
Published on

பிரபல தொலைக்காட்சி சேனலான டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிதான் மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியை தொகுத்து உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ்.

இந்த பிரபலமான நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் மோடி கலந்துக் கொண்டு காட்டுக்குள் பியர் கிரில்சுடன் பயணித்தார். இந்த நிகழ்ச்சி பல மொழிகளில் டப் செய்யப்பட்டு, கடந்த 12ம் தேதி இரவு 9 மணி அளவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

இதில், ‘உலகிலேயே மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்வாக பிரதமர் மோடி பங்கேற்ற மேன் vs வைல்ட் நிகழ்ச்சி புதிய சாதனை படைத்துள்ளது இப்போது அதிகாரப்பூர்வமானது. இந்நிகழ்ச்சி டுவிட்டரில் 3.6 பில்லியன் பதிவுகளை கொண்டு இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றதற்கான சாதனை படைத்திருந்த சூப்பர் பவுல் 53 எனும் நிகழ்ச்சியின் சாதனையை முறியடித்துள்ளது. இதற்கு காரணமான ஒவ்வொருவருக்கும் நன்றி’ என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com