அ.தி.மு.க.வில் பிளவு என்பதோ? அணி என்பதோ? கிடையாது: தம்பிதுரை

அ.தி.மு.க.வில் பிளவு என்பதோ?, அணி என்பதோ? கிடையாது. அரசியலில் கருத்து வேறுபாடு வரலாம். அந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சிலர் பிரிந்திருக்கிறார்கள் என மணப்பாறையில் தம்பிதுரை கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வில் பிளவு என்பதோ? அணி என்பதோ? கிடையாது: தம்பிதுரை
Published on

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க. அம்மா அணியின் கொள்கை பரப்புச் செயலாளருமான மு.தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆட்சிப் பொறுப்பும், கட்சி பொறுப்பும் ஒருவர் இடத்தில் இருக்க வேண்டும் என்பதை தான் வரவேற்றோம். ஆனால் இன்று சூழ்நிலை மாறுபட்டிருக்கின்றது. இருப்பினும் அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிப்படியே இந்த ஆட்சி மக்களுக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது என்றார்.

அ.தி.மு.க.வின் இரு அணிகளும் மாறி மாறி கருத்து கூறிவரும் நிலையில் இரு அணிகளும் இணைய வாய்ப்புள்ளதா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்து தம்பித்துரை கூறியதாவது:-

இரு அணிகளும் இணைய வேண்டும் என்பது தான் கழகத்தின் ஒட்டு மொத்த தொண்டர்களின் எண்ணம். ஏனென்றால் அ.தி.மு.க.வில் பிளவு என்பதோ?, அணி என்பதோ? கிடையாது. அரசியலில் கருத்து வேறுபாடு வரலாம். அந்த கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சிலர் பிரிந்திருக்கிறார்கள்.


அ.தி.மு.க.விற்குள் பிளவு இல்லை என்பதால் தான் ஆர்.கே.நகர் தேர்தலில் கூட தற்காலிகமாகத்தான் சின்னம் முடக்கி வைக்கப்பட்டுள்ளதே தவிர நிரந்தரமாக முடக்கப்படவில்லை.

மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு எங்களது ஆதரவு கிடையாது. மாட்டிறைச்சிக்கான தடை உத்தரவு மத்திய அரசு கொண்டு வந்த தேவையில்லாத ஒன்று. இதில் அ.தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை. அ.தி.மு.க.விற்கு விரைவில் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com