திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தாசில்தார்கள் உள்பட 19 பேர் இடமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் 19 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இடமாற்றம்
இடமாற்றம்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 தாசில்தார்கள், 9 துணை தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி நத்தம் தாசில்தார் ராதாகிருஷ்ணன் நத்தம்-துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலை நிலம்எடுப்பு பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய விஜயலட்சுமி நத்தம் தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும்படை தாசில்தார் வடிவேல்முருகன் பழனி தாசில்தாராகவும், பழனி தாசில்தார் பழனிசாமி பழனி கோட்ட கலால் அலுவலராகவும், பழனி கோட்ட கலால் அலுவலர் முத்துசாமி வேடசந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

அதேபோல் வேடசந்தூர் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நவநீதகிருஷ்ணன் மாவட்ட வழங்கல் அலுவலக பறக்கும் படைக்கும், மதுரை- நத்தம் தேசிய நெடுஞ்சாலை நிலம்எடுப்பு பிரிவு தாசில்தார் சந்திரன் கொடைக்கானல் தாசில்தாராகவும், ஒட்டன்சத்திரம் தாசில்தார் சரவணன் மதுரை-நத்தம் தேசிய நெடுஞ்சாலை நிலம்எடுப்பு பிரிவுக்கும், கொடைக்கானல் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சுப்பையா ஒட்டன்சத்திரம் தாசில்தாராகவும், கொடைக்கானல் கோட்ட கலால் அலுவலர் முத்துராமன் கொடைக்கானல் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுதவிர 9 துணைத்தாசில்தார்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி ஆத்தூர் மண்டல துணைத்தாசில்தார் சுரேஷ்குமார் திண்டுக்கல் கிழக்கு தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய முத்துலட்சுமி வேடசந்தூர் வட்ட வழங்கல் அலுவலராகவும், அந்த பொறுப்பில் இருந்த ஜெயபிரகாஷ் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய ஆறுமுகம் ஆத்தூர் மண்டல துணைத்தாசில்தாராகவும் மாற்றப்பட்டனர்.

நத்தம் மண்டல துணைத்தாசில்தார் மேனகா நத்தம் தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய மாயழகர் மண்டல துணைத்தாசில்தாராகவும், கலால் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் முருகானந்தம் கலெக்டர் அலுவலக தேர்தல் பிரிவுக்கும், அங்கு பணியாற்றிய முத்துவிஜயபாண்டியன் குஜிலியம்பாறை தலைமையிடத்து துணைத்தாசில்தாராகவும், அந்த பதவியில் இருந்த அந்தோணிசாமி கலால் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com