தூத்துக்குடி முள்ளக்காட்டில் ‘டீ’ விலை அதிரடி குறைப்பு

முள்ளக்காட்டில் உள்ள டீக்கடைகளில் டீ மற்றும் காபி விலை குறைக்கப்பட்டு டீ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தூத்துக்குடி முள்ளக்காட்டில் ‘டீ’ விலை அதிரடி குறைப்பு
Published on

முள்ளக்காடு:

தூத்துக்குடி மாநகராட்சி 58-வது வார்டு திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள முள்ளக்காடு ஊர் முகப்பில் உள்ள ஓட்டல் மற்றும் தொடர்ச்சியாக உள்ள 5 டீக்கடைகளில் டீ மற்றும் காபி விலை குறைக்கப்பட்டு டீ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த திடீர் விலை குறைப்பால் அங்குள்ள பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் தூத்துக்குடி கடற்கரையோரமாக பல ஆயிரம் ஏக்கரில் உள்ள உப்பளங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், லாரிகளில் உப்பு ஏற்றுதல், மூடை உப்பு, பண்டல் உப்புகளை ஏற்றும் தொழிலாளர்கள், திருச்செந்தூர் சுற்றுலா பயணிகள் பெரிதும் வரவேற்பு தெரிவித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் டீ விற்பனை ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில் அதே டீ ரூ.5-க்கு நாங்கள் விற்பனை செய்கிறோம் என்று அவர்கள் கூறுகின்றனர். இதேபோல ஏரல் உள்பட பல பகுதியில் டீ விலையை குறைத்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com