ஸ்பை புகைப்படங்கள்: டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுவரவு ஹேட்ச்பேக் டியாகோ விஸ் மாடல் லிமிட்டெட் எடிஷன் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.
ஸ்பை புகைப்படங்கள்: டாடா டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன்
Published on

புதுடெல்லி:

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதுவரவு மாடலான டியாகோ அதிகம் விற்பனையாகி வரும் நிலையில் டியாகோ விஸ் லிமிட்டெட் எடிஷன் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. 

முன்னதாக லிமிட்டெட் எடிஷன் டியாகோ சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் இம்முறை வெளியாகியுள்ள புகைப்படங்களில் விஸ் லிமிட்டெட் எடிஷன் இன்டீரியர் அம்சங்கள் தெரியவந்துள்ளது. புதிய டியாகோ பெட்ரோல் மற்றும் டீசல் மோட்டார் மாடல்களை கொண்டுள்ளது. 

புதிய லிமிட்டெட் எடிஷன் பிளாக்டு-அவுட் ரூஃப் மற்றும் ORVM, மேனுவல் முறையில் இயங்கும் ORVM அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்டீரியர் அம்சங்களை பொருத்த வரை விஸ் எடிஷனில் பியானோ பிளாக் சென்டர் மற்றும் டேஷ்போர்டுகளில் பெர்ரி ரெட் அக்சென்ட்கள் கொண்டிருக்கிறது. இதுதவிர மற்ற அம்சங்களில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

டியாகோ விஸ் மாடலில் மேம்படுத்தப்பட்ட சீட் ஃபேப்ரிக்ஸ், 13 இன்ச் ஸ்டீல் வீல்கள் வழங்ப்பட்டுள்ளது. இன்ஜின் அம்சங்களை பொருத்த வரை 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது, இந்த இன்ஜின் 83bhp  மற்றும் 114Nm டார்கியூ கொண்டுள்ளது. இத்துடன் 1.05 லிட்டர் டீசல் மோட்டார் வழங்கப்ப்டடுள்ளது. இந்த இன்ஜின் 68bhp 140Nm டார்கியூ மற்றும் இரண்டு இன்ஜின்களிலும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com