நமோ டி.வி. செய்தி சேனல் அல்ல - டாட்டா ஸ்கை திடீர் பல்டி

நாங்கள் சிறப்பு சேவையாக வழங்கி வரும் ‘நமோ டி.வி.’ இந்தி செய்தி சேனல் அல்ல, அது பாஜகவால் நடத்தப்படும் விளம்பர சேனல் என்று டாட்டா ஸ்கை நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. #TataSky #NaMoTV
நமோ டி.வி. செய்தி சேனல் அல்ல - டாட்டா ஸ்கை திடீர் பல்டி
Published on

பாராளுமன்றத் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக மார்ச் 31-ம் தேதி நமோ டிவி தொடங்கப்பட்டது. இந்த டிவியின் லோகோவில் பிரதமர் மோடியின் புகைப்படம் உள்ளது.  பிரதமர் மோடியின் பிரசாரம் தொடர்பான செய்திகளை இந்த தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறது.
 
பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நமோ டிவி தொடங்க அனுமதி அளித்தது குறித்து காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் இரண்டு கட்சிகளும் புகார் அளித்தன.

இந்த புகார்களை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம், பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நமோ டி.வி.யை தொடங்க அனுமதி அளித்தது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு பதிலளித்த தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம், நமோ டிவி உரிமம் பெற்ற தொலைக்காட்சி அல்ல என்றும், டிடிஎச் விளம்பர தளம் என்றும் கூறியது.

ஆனால், இந்த விவகாரம் தேர்தல் கமிஷனின் நடவடிக்கைக்கு சென்ற பின்னர் டாட்டா ஸ்கை தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றி, திடீரென்று வேறு வகையிலான தகவலை இன்று வெளியிட்டுள்ளது.

நமோ டிவியில் ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் பாஜக தலைமையிடம் இருந்தே வருகிறது. இதில் வெளியாகும் நிகழ்ச்சிகள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு பாஜகவை தொடர்பு கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com