

வீட்டிற்குள் கொள்ளையர்கள் 2 பேர் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
மதுரவாயல், லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் திடீரென சத்தம் கேட்டு சங்கர் எழுந்தபோது வீட்டிற்குள் கொள்ளையர்கள் 2 பேர் பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார்.
உடனே கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது சங்கர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது அதே பகுதியை சேர்ந்த குணால் என்பது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.