திருத்தணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருத்தணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
Published on: 

அரக்கோணம் அடுத்த கீழாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம். இவரது மகன் திலீப் (வயது27). தொழிலாளி. இவர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் திருத்தணி அருகே சென்னை-அரக்கோணம் புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.

விபத்து

நந்தி ஆற்றின் அருகே புறவழிச் சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் திடீரென சாலையோரம் நின்று கொண்டு இருந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த திலீப்பை அவ்வழியே சென்றவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை திலீப் பரிதாபமாக இறந்தார்.

போலீசார்

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். புறவழிச் சாலையில் மின்விளக்குகள் முறையாக எரியாததால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com