சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்தது

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது.
சென்னை குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்தது
Published on: 
Summary

புழல் ஏரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1500 கனஅடி வரை வந்த தண்ணீர் இன்று காலை நிலவரப்படி 210 கனஅடி நீராக சரிந்தது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ண்ட்டைன் கோ தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்தது. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நீர் மட்டம் வேகமாக உயர்ந்தது.

குடிநீர்

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக சென்னையில் பலத்த மழை இல்லை. இதனால் குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது.

புழல் ஏரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 1500 கனஅடி வரை வந்த தண்ணீர் இன்று காலை நிலவரப்படி 210 கனஅடி நீராக சரிந்தது. ஏரியில் மொத்த உயரமான 21 அடியில் 17 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. மொத்த கொள்ளளவான 3300 மி.கனஅடியில் 2415 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக 204 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

கண்ணன்கோட்டை

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 150 கனஅடி தண்ணீர் வருகிறது. மொத்த கொள்ளளவான 3645 மி.கனஅடியில் 1488 மி.கனஅடி தண்ணீர் நிரம்பி உள்ளது. பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 490 கனஅடியாகவும, சோழவரம் ஏரிக்கு நீர் வரத்து வெறும் 10 கன அடியாகவும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிக்கு நீர்வரத்து 50 கனஅடியாகவும் உள்ளது.

பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் தற்போது 565 மி.கனஅடி மட்டுமே தண்ணீர் நிரம்பி இருக்கிறது. வரும் நாட்களில் பருவழை தீவிரம் அடையும் பட்சத்தில் குடிநீர் ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து நீர் மட்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வீராணம் ஏரி

கடலூர் மாவட்டத்தில் நேற்று கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து 2 ஆயிரத்து 58 கனஅடியாக உயர்ந்து உள்ளது. ஏரியில் மொத்த உயரமான 15.6 அடியில் 13 அடிக்கு தண்ணீர் நிரம்பி உள்ளது. மொத்த கொள்ள ளவான 1465 மி.கனஅடியில் 860 மி.கனஅடி தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com