

கிராண்ட்லையன், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் வடமாநில லாரிகள் உள்ளிட் வாகனங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒடிசா, ஆந்திராவில் இருந்து கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் செங்குன்றம் வழியாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு அதிகஅளவில் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செங்குன்றத்தையடுத்த வடகரை, கிராண்ட்லையன், வடபெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் போலீசார் வடமாநில லாரிகள் உள்ளிட் வாகனங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில் செல்லும் சரக்கு லாரிகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.