

திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தாஸ் ஆகியோர் விரைந்து சென்று பலியான அமீத்பாபுவின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஊத்துக்கோட்டை சத்தியவேடு சாலை பகுதியைச் சேர்ந்தவர் அமீத்பாபு (வயது59). இவர் தனது மகன் அப்துல் அசேனுடன் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியில் வந்த போது எதிர் திசையில் வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அமீத்பாபு படுகாயம் அடைந்து மகன் கண் முன்பே பரிதாபமாக இறந்தார். அப்துல் அசேனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தாலுக்கா இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் முரளி தாஸ் ஆகியோர் விரைந்து சென்று பலியான அமீத்பாபுவின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த அப்துல் அசேனும் அதே ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து திருவள்ளுர் தாலுக்கா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.