கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பஸ் மோதி குழந்தை பலி

வீட்டில் இருந்த குழந்தை திடீரென சாலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது.
கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி பஸ் மோதி குழந்தை பலி
Published on: 
Summary

விபத்தில் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் புக்கிரவாரி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 1 வயதில் நிரஞ்சனா என்ற பெண் குழந்தை உள்ளது.

1 வயது குழந்தை பலி

இந்த நிலையில் இன்று அதிகாலை குழந்தை நிரஞ்சனா வீட்டில் இருந்தது. வீட்டில் இருந்த குழந்தை நிரஞ்சனா திடீரென சாலைக்கு வந்து விட்டதாக தெரிகிறது.

அப்போது அந்த வழியாக வந்த தனியார் நர்சரி பள்ளி பஸ் ஒன்று குழந்தை மீது மோதியது. இதில் குழந்தை பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இதனை பார்த்து குழந்தையின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியாகினர். பெற்றோர் ஓடி வந்து இறந்து கிடந்த தங்களது குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர். இது அங்கு திரண்டிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

விசாரணை

இதுகுறித்து கீழ்க்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து உயிரிழந்த குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X