இலங்கை தமிழர்களின் துயரத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- நடிகர் மன்சூர் அலிகான் பேச்சு

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.
Mansoor Ali Khan
Published on
Summary

நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களின் வேதனையை தீர்க்க வேண்டும் என்றால் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்றார்.

ஈழத்தமிழர் படுகொலை தொடர்பாகவும், யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டு உள்ள நிகழ்வு தொடர்பாகவும் “நீதியின் ஓலம்” என்ற தலைப்பில் சென்னை சேப்பாக்கத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு ஈழ அகதிகள் பாதுகாப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பா.புகழேந்தி தலைமை தாங்கினார்.

வேல்முருகன்

கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் பேசுகையில்,”நான் எம்.எல்.ஏ.ஆக, இருந்தபோது தொடர்ந்து இலங்கை தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வந்திருக்கிறேன். ஆனால் தமிழீழத்தில் சென்று தலைவரை சந்தித்து அவரோடு உணவு சாப்பிட்டேன் என்று கூறக் கூடியவர்கள் இன்று ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்போது இலங்கை தமிழர் பிரச்சினைக்காக வாய் திறப்பதில்லை. தமிழ்நாட்டில் இலங்கை அகதிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. சிறப்பு முகாமில் பலர் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மன்சூர் அலிகான்

நடிகர் மன்சூர் அலிகான் பேசுகையில், ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டில் மிகவும் துன்பப்படுகிறார்கள். அவர்களின் வேதனையை தீர்க்க வேண்டும் என்றால் தனி ஈழம் தான் ஒரே தீர்வு என்றார்.

நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் குணங்குடி அனிபா, தமிழ் தேச மக்கள் கட்சியின் தலைவர் தமிழ்நேயம், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடாஜே. அப்துல் ரஹீம், நாடு கடந்த தமிழீழ அரசின் பாராளுமன்ற உறுப்பினர் தமிழினியன், வழக்கறிஞர் ஜான்சன் செந்தமிழ் குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக செம்மணி புதை குழியில் ராணுவத்தால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட மக்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com